தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நான்கு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சுன்னாகம் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இரண்டு நாள்களுக்கு முன்னர் திருட்டு இடம்பெற்றிருந்தது. அதுதொடர்பில் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்ததுடன் திருட்டுப் பொருள்களையும் அவர்களிடம் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவருக்கும் வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் காவல்துறையினர் கூறினர்.
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி
சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி