More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!
முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!
Jul 14
முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் முயற்சியில் மன்னார் மற்றும் முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்தப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆயிரம் மாகாண பாடசாலைகளில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் செயற்றிட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பதினைந்து பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.



வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பிரதிபலனாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மன்னார் கல்வி வலயத்தில் பாத்திமா ம.ம.வி,எருக்கலப்பிட்டி ம.ம.வி, அரிப்பு றோ.க.த.க பாடசாலை, முருங்கன் ம.வி சென்.ஏன்ஸ் ம.வி நானாட்டான் டிலாசல் கல்லூரி ஆகிய ஆறு பாடசாலைகளும் மடுக்கல்வி வலயத்தில் அடம்பன்.ம.ம.வி,பெரிய பண்டிவிரிச்சான் ம.வி ஆகிய இரண்டு பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்தில் மாங்குளம் ம.வி, ஒட்டுசுட்டான் ம.வி,யோகபுரம் ம.வி பாலிநகர் ம.வி.ஆகிய நான்கு பாடசாலைகளும் முல்லைத்தீவு

கல்வி வலயத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி,



உடையார்கட்டு ம.வி முல்லைத்தீவு ம.வி ஆகிய மூன்று பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.



இதேவேளை தரமுயர்த்தப்பட்ட குறித்த பாடசாலைகளின் பெயர்களை மாற்றம் செய்து பெயர்ப்பலகைகள் இடுவதற்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா கல்வியமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு

Oct08

யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Jan21

நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்

Sep22

இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குற

Apr02

பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி

Mar30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ

Apr02

பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக

Feb19

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க

Jan21

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ

Oct13

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்

Jun28

இரத்தினபுரி மற்றும் மொனராகலை  மாவட்டங்களைச் சேர்ந்

Apr04

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில

Mar14

அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்

Mar16

தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்

Feb02

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:03 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:03 am )
Testing centres