More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மூச்சுத்திணறல் வந்து சிறுமி உயிருக்கு போராடியபோதும் மனம் இரங்காத கொடூரன்!
மூச்சுத்திணறல் வந்து சிறுமி உயிருக்கு போராடியபோதும் மனம் இரங்காத கொடூரன்!
Jul 07
மூச்சுத்திணறல் வந்து சிறுமி உயிருக்கு போராடியபோதும் மனம் இரங்காத கொடூரன்!

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வாழைத்தார் கட்டும் கயிற்றில் கட்டி தொங்கவிட்டு நாடகமாடிய இளைஞர் பிடிபட்டார். அவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.



கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அடுத்த சுரக்குளத்தில் வசித்து வருபவர் அர்ஜூன்(வயது29). தேயிலை தோட்டத் தொழிலாளியான இந்த இளைஞர் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



அர்ஜுன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தேயிலை தோட்டத்தொழிலாளிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று வயதானது முதல், குழந்தையின் தந்தை வேலைக்கு சென்றபின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று மிட்டாய், பிஸ்கட் வாங்கிக்கொடுத்து குழந்தையை கொஞ்சுவது மாதிரி சில்மிசம் செய்து வந்துள்ளார்.



அந்த குழந்தைக்கு 6 வயது ஆன நிலையில் முன்பு போலவே அவரின் தந்தை வேலைக்கு சென்ற சமயம் பார்த்து சென்று மிட்டாய், இனிப்புகள் வாங்கிக்கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார்.



கடந்த 30ம் தேதி அன்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது மயங்கி விழுந்திருக்கிறார். சிறுமி இறந்தவிட்டதாக நினைத்த அர்ஜுன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போல் செட்டப் செய்யலாம் என்று நினைத்து வாழைத்தார் கட்டி தொங்கவிடப்படும் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்.



தூக்கு கயிறு கழுத்தை இறுக்கவும் மயக்கம் தெளிந்த சிறுமி, மூச்சுத்திணறலால் கை,கால்களை போட்டு அசைத்து துடித்து உயிருக்கு போராடியிருக்கிறார். துடிதுடித்து உயிர் இழக்கும் வரைக்கும் பார்த்து நின்றுவிட்டு, உயிரிழந்த பின்னர் ககவை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு, ஜன்னல் வழியாக தப்பித்து சென்றுள்ளார்.



இத்தனையும் செய்துவிட்டு சிறுமியின் இறுதிச்சடங்கில் ஒன்றுமே தெரியாதது போல் சோகமாக பங்கேற்றிருக்கிறார்.



6வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வது எல்லாம் சாத்தியமில்லை என்பதை உறுதி செய்து கொண்ட போலீசார் இது தற்கொலை அல்ல கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். சிறுமியின் உடற்கூரு ஆய்விலும் பாலியல் வன்கொடுமை செய்திருந்தது தெரியவந்தது.



சிறுமி என்பதால் அக்கம் பக்கத்தினரால்தான் அசம்பாவிதம் நடந்து இருக்கும் என்பதால் சிறுமியின் அருகில் இருக்கும் வீட்டாரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தனர். அப்போது அர்ஜூனுக்கு ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது.



அர்ஜுன் தனது செல்போனில் ஏராளமான ஆபாச படங்களை டவுன்லோட் செய்வது எந்த நேரமும் அதை பார்த்து வந்தது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரித்ததில் தான் செய்தது எல்லாம் ஒப்புக் கொண்டுள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி

Aug08

குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ

Sep17

பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க

Jul17

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு

Mar13

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர

Jul03
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (15:31 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (15:31 pm )
Testing centres