ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
அப்போது தொடங்கி இப்போது வரை ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மீதும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடி தரும் விதமாக அண்மையில் அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோனை பயங்கரவாதிகள் தூதரக கட்டிடத்துக்கு மேலே பறக்க விட்டனர்.
எனினும் அமெரிக்க தூதரகத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அபாய ஒலியை எழுப்பி இதுகுறித்து எச்சரித்தது. அதனை தொடர்ந்து தூதரகத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக ஈராக்கின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடி தகவல்கள் இல்லை.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
