மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, அண்மை காலமாக பள்ளி மாணவ, மாணவிகள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கதுனா மாகாணத்தின் தலைநகர் கதுனா சிட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர். இதனால் பதற்றமடைந்த மாணவ-மாணவிகள் பலர் மற்றும் ஆசிரியர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி அருகில் உள்ள புதர்களுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். ஆனாலும் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 140 மாணவர்களை கடத்தி சென்றனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறத
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்
பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வல
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக
ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்
