ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ரசல் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் ரன்களை குவித்தது.
7.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி அதன்பின் சரிவைக் கண்டது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டாடனார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மெக்காய் 4 விக்கெட், வால்ஷ் 3 விக்கெட், பாபியன் ஆலன் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது மெக்காய்க்கு அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே ந
