More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமை – க.வி.விக்னேஸ்வரன்
சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமை – க.வி.விக்னேஸ்வரன்
Jul 10
சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமை – க.வி.விக்னேஸ்வரன்

நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன.



என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் நடைபெற்ற அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



ஜனநாயக ரீதியில் தேர்தல் ஒன்று நடைபெறும்போது வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் எழுத்தில் அடங்காத உடன்பாடு ஒன்று எட்டப்படுகின்றது. நாம் உங்களுக்கு வாக்களித்து நீங்கள் வென்றால் எமது பிரச்சினைகளைப் பேச வேண்டும். அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரம் கிடைத்த பின்னர் எம்மை விரட்டக் கூடாது என வாக்காளர் வேட்பாளர்களுடன் உடன்பாடு செய்கின்றனர்.



வேட்பாளர்களும் இந்த எழுத்தில் அடங்காத உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு, நாம் வென்றால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம், சுயநலம் கருதிச் செயற்படமாட்டோம். உங்களுடன் ஒன்றாக நிற்போம் என்று கூறுகின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் தாற்பரியம்.



ஆனால், இவ்வாறு வாக்காளர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வென்ற பின்னர் மக்களை மறந்து, அவர்களுடனான உடன்பாடுகளை மீறி ஜனநாயகத்துக்கு முரணாகச் செயற்படத் தொடங்குகின்றனர். இதனால் மக்கள் இந்த அரசியல்வாதிகளுடனான தமது உடன்பாட்டை எடுத்துக்காட்ட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.



இதனை எடுத்துக்காட்ட முற்படும்போதே ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது என ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரம் தலைதூக்குகின்றது.



தற்போது நிர்வாகம் சம்பந்தமான சகல விடயங்களிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் சர்வாதிகாரம் வித்திடப்படுகின்றது.



இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன. இவ்வாறான நிலையில்தான் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். இவற்றையும் சர்வாதிகாரம் மூலம் அடக்கவே ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் à

Jan28

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாà

Jan19

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது

Feb23

கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திà

Jan12

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார் à®

Feb07

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒரà

Mar03

பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்ட

Jul30

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக ம

Apr03

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றà

Feb12

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர

Jan21

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி

Jan30

அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரà

Oct05

வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்கà¯

Mar14

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய

Apr05

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:50 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:50 am )
Testing centres