More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காவல்துறையின் கைதுகள் மனித உரிமைகள் நிபந்தனைகளை மீறுகின்றன – ஜே.வி.பி
காவல்துறையின் கைதுகள் மனித உரிமைகள் நிபந்தனைகளை மீறுகின்றன – ஜே.வி.பி
Jul 10
காவல்துறையின் கைதுகள் மனித உரிமைகள் நிபந்தனைகளை மீறுகின்றன – ஜே.வி.பி

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீறி, காவல்துறையினரின் கைதுகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜே.வி.பி. இன்று முறைப்பாடு செய்துள்ளது.



மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த மே மாதம் குறித்த நிபந்தனைகளை வெளியிட்டது.



கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில், சட்டம் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில், காவல்துறையினர் சட்டரீதியாக செயற்பட வேண்டும் என அந்த நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



கைது செய்தலானது, சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமையவும், குற்றவியல் வழக்குகள் ஏற்பாடுகள், காவல்துறை திணைக்களத்தின் உத்தரவு மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஆகியனவற்றைக் கருத்திற்கொண்டு இடம்பெறல் வேண்டும்.



அத்துடன், கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அனைத்து நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், இன்று ஜே.வி.பியின் சட்டத்தரணி சுனில் வட்டவல, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.



இதன் பின்னர் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை முதலான சந்தர்ப்பங்களின் போது குறித்த விடயங்கள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடிà®

Aug17

வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொரà

Mar17

கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின் à

Feb09

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்பà®

Mar10

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினாலà¯

Jan24

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்à®

Jun06

இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜ

Jun29

எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா

Feb12

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிகà¯

Mar20

இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய à®

Jun11

விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருà®

Jan13

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறுà®

Sep21

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூரà

Mar16

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்à®

Sep26

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று  யாழ்à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:50 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (11:50 am )
Testing centres