பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். திலீப் குமார் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர் ஆவார். இதனால் அவர் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார்.
அதுமட்டுமின்றி இந்திய- பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாக அவர் திகழ்ந்தார்.
இந்த நிலையில் திலீப் குமார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ,“ திலீப்குமார் காலமானதை அறிந்து வருந்துகிறேன். எனது தலைமுறையில் திலீப்குமார் மிகச் சிறந்த மற்றும் பன்முக நடிகராக இருந்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் புற்றுநோய் மருத்துவமனைகளை அமைப்பதற்கு நிதி திரட்ட தனது நேரத்தை வழங்குவதில் அவரின் தாராள மனப்பான்மையை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பாகிஸ்தான் மற்றும் லண்டனில் அவரின் தோற்றம் மிகப் பெரும் தொகையை திரட்ட உதவியது” என தெரிவித்துள்ளார்.
பெஷாவர் நகரில் உள்ள திலீப்குமாருக்கு சொந்தமான வீட்டை தேசிய பாரம்பரிய சொத்தாக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாத
விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
உக்ரைனில் வாழ்ந்துவரும் 82 வயதான மூதாட்டியின் வீடு ரஷ்
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங்
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்
