More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து செயற்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து  செயற்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
Jul 03
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து செயற்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா

கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து  செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்தியாவிற்கு நன்றியினையும் தெரிவித்தார்.



எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது அவசர உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்தியக் கடற்படையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுக்தில் (02.07.2021) நடைபெற்றது.



இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர்,



ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதப்புக்கள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 



எமது அவசர கோரிக்கையை ஏற்று, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவற்படை ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.



இலங்கைக்கு உதவிகளும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் உடனடியாக உதவுகின்ற இந்தியா கப்பல் விபத்தின் போதும், விரைந்து வந்து தமது உதவிகளை வழங்கியிருந்தன.



எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவற்கு மாத்திரமன்றி, ஏற்பட்ட பாதிப்புக்ளை மதிப்பிடுவதிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு பேருதவியாக அமைந்திருந்தது.



எதிர்காலத்திலும், கடலுக்கு அடியில் இருக்கின்ற கொள்கலன்களை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான தொழில் நுட்ப உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.



மேலும், கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை இந்திய அரசாங்கத்திடம் தான் கோரியிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டு நாடுகளும் அவசர தேவைகளில் மாத்திரமன்றி கடல்சார் பொருளாதார அபிவிருத்தியிலும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்புà

Sep21

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த

Sep23

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் சà

Oct14

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானà®

Sep06

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர

Feb04

இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிடà¯

Jun21

நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத

Apr03

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு

Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்à

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகà®

Oct25

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை à

Mar04

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதà

Sep20

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத

Mar17

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செயà

Sep30

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்à®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:11 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:11 pm )
Testing centres