More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சீனாவை ஒடுக்க நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் - அதிபர் ஜின்பிங் பேச்சு
சீனாவை ஒடுக்க நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் - அதிபர் ஜின்பிங் பேச்சு
Jul 02
சீனாவை ஒடுக்க நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் - அதிபர் ஜின்பிங் பேச்சு

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி கடந்த 1921-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி நிறுவப்பட்டது.



நீண்ட உள்நாட்டு போருக்கு பிறகு அக்கட்சி 72 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை பிடித்தது. கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டையொட்டி இன்று தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் சுமார் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.



கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த பிரமாண்ட விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.



சீன மக்களின் தேசிய இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க கொண்டுள்ள பெரும் தீர்மானத்தையும், வலுவான விருப்பத்தையும், அசாதாரண திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. எங்கள் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை பாதுகாப்பதற்கான அதிக திறன் மற்றும் நம்பகமான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.



சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.



சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம். சீனாவை யாரும் அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம்.



சீன மக்கள் ஒரு போதும் எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் தங்களை ஒடுக்கவோ அல்லது அடிபணியவோ அனுமதிக்க மாட்டார்கள். அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எவரும் 1.4 பில்லியனுக்கும் அதிகமான சீன மக்களால் உருவாக்கப்பட்ட பெருஞ் சுவரில் மோத வைக்கப்படுவார்கள்.



தைவானை சீன நிலப்பரப்புடன் ஒருங்கிணைப்பது ஆளும் கட்சியின் வரலாற்று பணியாகும். தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை நாம் துரிதப்படுத்த வேண்டும்.



இவ்வாறு அவர் பேசினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

 

இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் à®

Apr02

அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த à

Mar22

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தà¯

Jun08

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட 

மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங்

Mar02

 1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்களà¯

Jul29

உலக அளவில்  கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு à®

Mar28

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Aug24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Feb25

 உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறை

Oct25

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம

Aug21

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17

Mar24

யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியாà®

Feb07


துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைமà

Sep19

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்றà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (17:32 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (17:32 pm )
Testing centres