தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் சுள்ளக்கரை தெருவை சேர்ந்தவர் சரவணன் (22). கட்டிட தொழிலாளி. இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், சரவணன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்றுவிட்டார்.
சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது பெற்றோர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் சரவணன், சிறுமியை அழைத்துச்சென்றது தெரியவந்தது.இதனையடுத்து, சரவணன் மற்றும் சிறுமியை ஆய்வாளர் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் இருவரும் கம்பம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் சரவணனை கைது செய்து, அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.தொடர்ந்து, அவரை உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பின்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப் கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை
