திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் வந்தனர். பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலை திருப்பதி கோவிலுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். இக்கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும். அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பக்தர்கள் தங்கும் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவுப்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ராணிமகாராஜபுரம் பகுதியில் உள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நயினார்பத்து பகுதியில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தையும் பார்வையிட்டனர்.
முன்னதாக, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பà¯
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியானà
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குணà¯
நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருà®
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுà
தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையிà®
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே à
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவரà¯
புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக
