சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் தள்ளாடியபடி சாலையில் நடந்து வந்தார். திடீரென்று அவர் சாலையில் சென்றவர்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டார். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த பெண் கஞ்சா போதையில் இருப்பது தெரிய வந்தது. அவர் போலீசாரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
மெரினா கடற்கரை சாலையின் நடுவே கால் மேல் கால் போட்டு படுப்பதும், உருண்டு புரள்வதும், மாநகர பஸ்சை வழிமறிப்பதும் என கஞ்சா போதையில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்த பெண்ணின் அலப்பறை தொடர்ந்தது.
அந்த பெண்ணை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் பரிதவிப்புக்கு ஆளாகினர். இந்தநிலையில் அந்த வழியாக 108 ஆம்புலன்சில் சென்ற ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்ணின் போதையை தெளிய வைப்பதற்கான திரவத்தை அளித்தனர். பின்னர் அவரை குண்டு கட்டாக ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் மெரினா கடற்கரை நடைபாதையில் வசிக்கும் தனலட்சுமி என்பது தெரிய வந்தது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்ப
லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்
கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத