ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரான்சிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு கிளம்பி இருந்தது. தற்போது இந்த புகார்கள் தொடர்பான விசாரணைக்காக நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்து உள்ளது. இதைத்தொடர்ந்து ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
ரபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் தொடா்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதன் மூலமாக நாட்டை வலுவிழக்கச் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.இது தொடர்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரபேல் போா் விமான ஒப்பந்தம் தொடா்பாக தன்னாா்வ அமைப்பு ஒன்று பிரான்ஸில் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அதை விசாரிக்க நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதை ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
ரபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் மக்களிடையே காங்கிரஸ் தொடா்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறது. இந்த ஒப்பந்தம் வாயிலாக காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பலனும் கிடைக்காததால், பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை அக்கட்சி தெரிவித்து வருகிறது. இதன் மூலமாக, நாட்டை வலுவிழக்கச் செய்ய அக்கட்சி முயன்று வருகிறது” என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம் தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க