More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மியாமி கட்டிட விபத்தில் 4 பேர் பலி - இடிபாடுகளில் சிக்கியுள்ள 159 பேரின் கதி என்ன?
மியாமி கட்டிட விபத்தில் 4 பேர் பலி - இடிபாடுகளில் சிக்கியுள்ள 159 பேரின் கதி என்ன?
Jun 26
மியாமி கட்டிட விபத்தில் 4 பேர் பலி - இடிபாடுகளில் சிக்கியுள்ள 159 பேரின் கதி என்ன?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே   நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் தங்கி இருந்தனர். 1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு  பணி நடைபெற்று வந்தது.



இதற்கிடையே, இந்தக் கட்டிடம் நேற்று அதிகாலை 1 மணியளவில் சீட்டுக்கட்டு போல் திடீரென சரிந்து விழுந்தது.  கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்தது.



இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன. 



முதல் கட்டமாக இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.



கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து மியாமி-டேட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



இந்நிலையில், மியாமி குடியிருப்பு கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 159 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை என மியாமி-டேட் பகுதி மேயர் டேனியல்லா லெவின் காவா தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் மற்றும் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.



1981-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 1990-களில் இருந்து ஆபத்தான கட்டிடமாக  உள்ளது என 2020-ம் ஆண்டில் பூமி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பேராசிரியரான ஷிமோன் வோடோவின்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பராகுவே ஜனாதியின் உறவினர்கள் உள்பட பராகுவேவை சேர்ந்த 51 பேரை காணவில்லை என பராகுவே வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி



உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம

Mar05

விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்

Jun08

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பாரிய விரிசல்

Mar21

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே

Aug16

துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழà

Aug17

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதà®

Oct20

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொறà

Aug10

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Mar08

உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ரà

Mar07

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®

Jun25

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராணà

May04

ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின

May20

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி à®

Mar25

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்

Mar06

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்à

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (18:14 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (18:14 pm )
Testing centres