சித்தி 2’ சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காயத்ரி யுவராஜ் இணைந்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
20 வருடங்களுக்கு முன்பு சன் டிவி-யில் ஒளிப்பரப்பான மெகாஹிட் சீரியல் ‘சித்தி’ நடிகை ராதிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் அந்த காலத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இல்லத்தரசிகள்ள கொண்டாடிய அந்த சீரியல் இன்றைக்கு அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது. அதன்பிறகு ராதிகா பல சீரியல்களில் நடித்தாலும் அது பெரிதாக வெற்றிப் பெறவிலலை. அதற்கு உதாரணம் அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி போன்ற சீரியல்கள்.
பின்னர் சீரியல்களில் இருந்து விலகிய இருந்த ராதிகா மீண்டும் சித்தி-2 சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியலை சன் டிவியுடன் இணைந்து ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நிழல்கள் ரவி, காயத்ரி யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென ராதிகா விலகுவதாக அறிவித்தார்.
தற்போது கவின் – வெண்பா கதாபாத்திரங்களை மையப்படுத்தி இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இதையடுத்து சீரியலில் புதிய திருப்பங்களை கொண்டு வரவும், விறுவிறுப்பாக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் காயத்ரி யுவராஜ். நந்தினி கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் சில நாட்களாக சீரியலில் காணப்படவில்லை. இந்நிலையில் 'சித்தி 2' சீரியலில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் காயத்ரி யுவராஜ். இந்த தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார்.