மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27-ம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 6 மாதங்கள் முடிந்து 7-வது மாதத்தைத் தொட்டுள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, போராட்டம் தொடங்கி 7-வது மாதம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் சார்பில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
நாட்டில் பெரும்பான்மை பிரிவினர் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இந்த சட்டங்களில் ஏதேனும் ஷரத்துக்கள் ஆட்சேபத்துக்கு உரிய வகையில் இருந்தால் மத்திய அரசு அதற்கு தீர்வு காண தயாராக உள்ளது என தெரிவித்தார்.
அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை
கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வக
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக ச
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்
மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்