மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மைசூரு மிருகக்காட்சி சாலையில் நடந்தது.
இதில் கர்நாடக பாஜக துணை தலைவரும், முதல்-மந்திரி எடியூரப்பாவின் இளைய மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவார் என்பது முடிந்து போன கதை. அதனால் முதல்-மந்திரி மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம். மீதம் உள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பா தான் முதல்-மந்திரியாக இருப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
கர்நாடக பாஜகவினர் டெல்லிக்கு சென்றால் தலைமை மாற்றம் குறித்து தான் பேச போகிறார்கள் என்று அர்த்தமா?. டெல்லிக்கு செல்பவர்கள் அவர்களது சொந்த வேலையாக கூட செல்லலாம். டெல்லிக்கு செல்ல கூடாது என்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. இதனால் கா்நாடக பா.ஜனதாவினரின் டெல்லி பயணத்திற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம்.
தேர்வு எழுதி உள்ளேன். முடிவுக்காக காத்து இருக்கிறேன் என்று மந்திரி சி.பி.யோகேஷ்வர் கூறி உள்ளார். அவரது கருத்தை பற்றி விவாதம் நடத்த வேண்டியது இல்லை.
கர்நாடக பாஜக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கர்நாடகம் வந்து எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்று உள்ளார். தேசிய தலைவர்களும் எடியூரப்பா ஆட்சியை பாராட்டி உள்ளனர்.
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா
போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியா
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர
உடல்நலக்குறைவால் மறைந்த
இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத
