உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான பிரத்யேக கருவிகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் முககவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன.
அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.
சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல் கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ
கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
