வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இன்று (01.07) காலை வவுனியா நகரின் பசார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன இராணுவம் மற்றும் காவற்துறையரால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டு நான்கு இடங்களில் சுகாதாரப் பிடிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பசார் வீதி சந்தி, தர்மலிங்கம் வீதி சந்தி, சந்தை உள்வட்ட வீதி சந்தி, மில் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி என்பவற்றில் வைத்து சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது வர்த்தக நிலையங்களில் பணியாற்றியோர், நகருக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தோர், வாகனச் சாரதிகள் என சுமார் 400 இற்கு மேற்பட்டவர்களுக்கு இதன்போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், பி.சி.ஆர் எடுத்த பின்பே மக்கள் நகரில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். குறித்த பி.சி.ஆர் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோச
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு
நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொ
உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும