இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்காக பிரேசில் அரசு கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் பிரேசில் நாட்டின் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசிக்கான இறக்குமதி கோரிக்கைகளை மறுத்தது.
விரிவான ஆய்வுக்கு பிறகே பிரேசிலில் தடுப்பூசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்ற சூழல் உருவானது. இதன் காரணமாக ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பப்படவில்லை. இதற்கிடையில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஏற்கனவே அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக அவர் மீது கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து அவருக்கு எதிரான முறைகேடு புகார் குறித்த விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில், கோவேக்சின் 20 கோடி டோஸ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ கெய்ரோகா அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம
உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உள்பட பல விஷயங்கள் குறித்து ர
உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உ
உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ப
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுக
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உலக அளவில் 1.77 கோடி பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி இர
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு
இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத
