இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்டாக் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த உயர்ஸ்தானிகர் முதலில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு காணொளி முறையில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல
பெண்களின் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகா
ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன
