யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அதாவது யாழில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவு, யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69 மற்றும் ஜே,71 கிராம அலுவலர் பிரிவு மற்றும் கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் தடுப்பூசி போடும் பணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெறும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செய
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள ந
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
