இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான நியுவிங்டன் என்ற இடத்தில் எலிபண்ட் அன்ட் காசல் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், எலிபண்ட் அன்ட் காசல் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரெயில்வே வளைவுகளுக்கு அருகிலுள்ள 3 வணிக வளாகங்கள், 6 கார்கள் மற்றும் தொலைபேசி பெட்டி ஆகியவை எரிந்து நாசமானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர். தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் அப்பகுதி முழுக்க கரும்புகை பரவியது.
இதனால் அருகில் இருக்கும் வீடுகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூட வலியுறுத்தப்பட்டனர். தீ விபத்து குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என தீயணைப்பு வீரர்கள் கூறினர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்ச
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 32 ஆவது நாளாக நீடித்த
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க
