சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களில் ரீத்து வர்மா விக்ரமுக்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்குà
தமிழ் சினிமாவின் டா
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவரà
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செà
பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்பà
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து à®
பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் ம
நடிகர் சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்à
1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்
‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நடà®
என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெà
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பà®
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூகà
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
