மகாராஷ்டிராவில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் 3-வது அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை கடந்த வாரம் எச்சரித்து இருந்தது. இந்தநிலையில் மாநிலத்தில் 21 பேர் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினாா். இதில் அவர், "மாநிலத்தில் அதிகபட்சமாக ரத்னகிரியில் 9 பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜல்காவில் 7 பேரும், மும்பையில் 2 பேரும், பால்கர், தானே, சிந்துதுர்க்கில் தலா ஒருவரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது மாதிரிகளின் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் 21 பேருக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகள் கடந்த மே 15-ந் தேதி முதல் சேகரிக்கப்பட்டவை ஆகும். தற்போது தொற்று பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து வருகிறோம். மேலும் அவர்களின் முந்தைய பயண விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. உருமாறிய டெல்டா பிளஸ் வைரசை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக
நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகை
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி
கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட
மத்திய நிதி மந்திரி
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி த கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பக