அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 3-வது அணி அமைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் இன்றி பாஜகவுக்கு எதிரான அணியை அமைக்க முடியாது. இதற்கான சாத்திய கூறுகள் இல்லை" என்றார்.
மேலும் மராட்டியத்தில் வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று நானா படோலே கூறி வருகிறார். இந்த சமயத்தில் தேர்தல் பற்றி பேசினால் மக்கள் நம்மை செருப்பால் அடிப்பார்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பகிரங்கமாக நானா படோலேயை எச்சரித்தார். அதே வேளையில் நீங்கள் தனித்து போட்டியிட்டால், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்தார். .
இதற்கு பதிலளித்த நானா படோலே, வரும் தேர்தல்களில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அதற்காக எனது வாழ்த்துக்கள் என்று பதிலளித்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித
அதிமுக ஒ
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வா
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள
பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம்
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ