பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது
கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள், கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அதிகாரிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பெற்று பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். குழந்தைகள் நீண்ட காலம் வீடுகளில் இருப்பது அவர்களது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. கடந்த காலங்களில் பள்ளிகளில் இருந்து கொரோனா பரவவில்லை.
கொரோனா பாதிப்பு குறைந்தால் பள்ளிகளை திறக்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. பள்ளிகளுக்கு வர குழந்தைகள் மிக ஆர்வமாக உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டை போல் பள்ளிகளில் வித்யாகம திட்டத்தை தொடங்கி வகுப்புகளை நடத்தலாம் என்று சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால் கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
அதுவரை ஆன்லைன், சமூக வலைத்தளங்கள், கல்வி தொலைக்காட்சி மூலம் குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 10-ம் வகுப்பு தேர்வை பாதுகாப்பான சூழலில் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வருகிற 28-ந் தேதி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த
கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம்
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி
6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ
முதல்-அமைச்சர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா
