ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர், குய்லூம் சோரோ (வயது 49).
இவர் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது நாட்டை விட்டு ஓடி பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் இவர் மீதான வழக்கு விசாரணை அபித்ஜான் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. ஐவரிகோஸ்ட் அரசின் அமைப்புகளை இழிவுபடுத்தும் வகையில் போலி செய்திகளை பரப்பியதாகவும், வெளியிட்டதாகவும் அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 19 பேர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்தநிலையில் விசாரணை முடிவில் குய்லூம் சோரோ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறிய கோர்ட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த தண்டனையை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதை எதிர்த்துப்போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். அவரது அரசியல் இயக்கத்தை கலைக்க உத்தரவிட்ட கோர்ட்டின் முடிவை அவர் விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், “இந்த நியாயமற்ற தீர்ப்பை முழுமையாக நிராகரிக்கிறேன்” என கூறி உள்ளார்.
இவர் 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக 2019-ல் அறிவித்தார். ஆனால் அவர் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அலசேன் ஒட்டாரா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்திலà¯
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்
அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்à
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்கà
அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில
சீன அரசானது நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுக்கான &nbs
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை
மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்à
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்à®
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
