மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த தொண்டர்கள் பலர் கூட்டம் கூட்டமாக மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர்.
அந்தவகையில் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா தொண்டர்கள் 150 பேர் நேற்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இதற்காக இளம்பஜார் பகுதியில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
பா.ஜனதாவில் இருந்து விலகிய தொண்டர்களை அதில் நிறுத்தி அவர்கள் மீது கிருமிநாசினி(சானிடைசர்) தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களுக்கு தங்கள் கட்சிக்கொடியை வழங்கி கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
இது குறித்து உள்ளூர் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘பா.ஜனதாவில் பணியாற்றியவர்களை மீண்டும் ஏற்பதற்கு முன் அவர்களை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 200 பேர் சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்திருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக்கொண்டனர். பா.ஜனதாவில் இணைந்து தாங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரமாக இதை மேற்கொண்டதாக அவர்கள் கூறினர்.
சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு
தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன் நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க
