சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது.
இந்தியாவில் அந்த வகையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, இந்த டெல்டா வைரஸ் தற்போது உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ் டெல்டா-பிளஸ் என அழைக்கப்படுகிறது.
இந்தப் புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’ பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது. இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது.
மேலும், டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ள இடங்களில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல் மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார
