அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு நூலகத்துக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.
மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அந்த மர்ம நபர் மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்து, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதற்கிடையில் துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதால், போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த அந்த நபரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித
இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ
ஆப்கானிஸ்தான் நாட்டை
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ
