தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சபையில் நேற்று தெரிவித்தார்.
’10 – 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசு செயற்படுத்த வேண்டும்’ என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, சபையில் நேற்று உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். இதன்பின்னர் உரையாற்றும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பான நிலைப்பாட்டை ஆவணப்படுத்துகின்றேன். அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கருத்தை வரவேற்கின்றோம். இந்த விடயத்தில் அரசியல் வேறுபாடு இன்றி எமது ஆதரவு உண்டு.
மேலதிகமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அண்மையில் சமூக ஊடகப் பதிவுகளுக்காக இந்தச் சட்டத்தில் கைதுசெய்தவர்களையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.
தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்ததை தொடர்ந்து, இங்
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத
எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு
இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்க
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம
சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பி
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
