இந்தியாவில கொரோனாவின் 2-வது அலை தணிந்து வரும் நிலையில், 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் டாக்டர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தியுள்ளனர். மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த ஆய்வு 5 மாநிலங்களில் நடந்துள்ளது.
2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இந்த சர்வேயில் வியக்கத்தக்க முடிவுகள் வெளிவந்துள்ளன. அதாவது குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. அந்தவகையில் புள்ளி விவர ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதிக்காது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
* என்னை தொட்டால் கத்தியால் குத்திக் கொள்வேன் என போலீசா
ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ
ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம
இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்த
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
அதிமுக ஒ இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் த