கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு பொதிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படத்தப்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு, மீராவோடை கிழக்கு மற்றும், மீராவோடை மேற்கு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்குமான உலர் உணவு பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் தவிர்ந்த 1211 குடும்பங்களுக்கு அரிசி, பால்மா, கோதுமை, சீனி, நூடில்ஸ் அடங்கலான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியில் முதற்கட்டமாக ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று உலர் உணவு பொதிகளை வழங்கி வருகின்றனர்.


போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
