நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதையடுத்து நடிகை நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒருபடம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவையாம். தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவ
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர
நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பத
90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்
தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன
கிரிக்கெட் வீரர் தோனி மு
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண
