மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் பிரித்விராஜ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இதனிடையே, மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணி ‘ப்ரோ டாடி’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாக இது அமைந்துள்ளது. குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க