கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து நல்ல பலன் அளிப்பது தெரியவந்ததையடுத்து இந்த மருந்தை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. மருந்துக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த சூழலைப் பயன்படுத்தி, சிலர் ரெம்டெசிவிர் மருந்துகளை போலியாக தயாரித்து மக்களிடம் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். அவர்களை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ரோபார் பகுதியில் போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரித்தது கும்பல் சிக்கியது. போலி மருந்து ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, போலி மருந்து தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள், டிசைன்கள், குப்பிகள் மற்றும் 2 கோடி ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்து வணிகம் தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட
பிக்பாஸ் பிரபலம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச