ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும்.
இந்த நிகழ்வின் போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2ம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார்.
மாநாட்டிற்கிடையில், ராணி 2ம் எலிசபெத் கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக ராணி வாள் கொண்டு கேக் வெட்டியது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. ராணி வாளால் கேக் வெட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ராணி கேக் வெட்டிய நிகழ்வானது, அவரது பிறந்த நாளை நினைவுபடுத்தியது. அவரது உண்மையான பிறந்த நாள் ஏப்ரல் 21 ஆகும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது கணவர் இளவரசர் பிலிப் மறைந்ததால், ராணியின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படவில்லை.

உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்தியà®
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடநà¯
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சிதà¯
இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுà
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசà®
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இà
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்குà®
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுà®
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நி
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிரà
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்à
மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து நà
