More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகத்திற்கு ஓரிரு நாளில் அதிக தடுப்பூசிகள் வரும்: எடியூரப்பா
கர்நாடகத்திற்கு ஓரிரு நாளில் அதிக தடுப்பூசிகள் வரும்: எடியூரப்பா
Jun 12
கர்நாடகத்திற்கு ஓரிரு நாளில் அதிக தடுப்பூசிகள் வரும்: எடியூரப்பா

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹாசன் மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவுக்கு சென்றார். அங்கு தனது தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது



கர்நாடகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அதன் பரவல் விகிதத்தை 5 சதவீதத்திற்குள் கொண்டு வரும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.



பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித விலகலை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் அதிக தடுப்பூசிகள் வரும். அவை மாவட்டங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.



கர்நாடகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனால் விவசாயிகளுக்கு வழங்க தேவையான விதைகள், உரம் ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உரங்கள் பதுக்குவதை தடுக்க வேண்டும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனே்.



இவ்வாறு எடியூரப்பா கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள

Apr10

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற

Mar15

தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி

May30

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு

Jan04

வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க

Aug23
Sep12

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல

Aug12
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (19:13 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (19:13 pm )
Testing centres