வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபா, கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தார். அவரது அழைப்பின்பேரில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று காலை குவைத் சென்றார்.
இது, குவைத்துக்கான அவரது முதலாவது இருதரப்பு பயணம் ஆகும். விமான நிலையத்தில் அவரை உதவி வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் ரசாக் அல்கலீபா வரவேற்றார். இந்திய தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் இந்திய அதிகாரிகளும் வந்திருந்தனர்.
இந்நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் அல்ஹமாத் அல்சபாவை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியா-குவைத் இடையிலான தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறைவையொட்டி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இருநாட்டு உறவை உயர்மட்டத்துக்கு கொண்டு செல்லும் உறுதிப்பாட்டுக்காக ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
ரஷ்யா
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்
உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ண
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
