More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மாஸ்க் அணியாத பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்!
மாஸ்க் அணியாத பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்!
Jun 15
மாஸ்க் அணியாத பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்!

கொரோனா-வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.



அந்த நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் அலட்சியப் போக்கே இந்த சுகாதார நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.



ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரசை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டுப் பேசி வரும் போல்சனாரோ, கொரோனா-வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியமற்றவை என்று கூறி வருகிறார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.



இந்நிலையில், சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார்.



இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம், கொரோனா தடுப்பு விதிமுறைகளைமீறி மாஸ்க் அணியாமல் அதிக அளவில் ஆட்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டதாகக் கூறி அதிபர் போல்சனாரோவுக்கு 100 அமெரிக்க டாலர் ‌(இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,300 ) அபராதம் விதித்துள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr20

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி

Apr29

சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை à

Aug11

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்à®

Mar02

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகà

Mar08

உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்புà

Mar02

உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு

Apr28

சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவாà®

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Aug06

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்

Jan18

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாà

Oct01

வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த

Jan12

  அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில

Sep04
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 18 (19:38 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 18 (19:38 pm )
Testing centres