மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஒன்பது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு செல்லும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனை ஒன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென
இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இà
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரà¯
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இà
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தà
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளாà
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலà
அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்à
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மà®
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து தà
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி
கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
