இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. அதேசமயம் உயிரிழப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 2726 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 25 கோடியை கடந்தது
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,13,378 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 25,90,44,072 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட
சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா
பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெ
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர
இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்
உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச்
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த