உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கங்கையில் வீசும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் அரங்கேறின.
இந்த மாநிலங்களில் ஏராளமான உடல்கள் கங்கையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினமும் 3 உடல்கள் கங்கை நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள கன்னாஜ்-கர்தோய் மாவட்ட எல்லைப்பகுதியான பத்னாபூர் காட்டில் இந்த உடல்கள் மிதந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.
ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் உடல்கள் என மீட்கப்பட்ட அந்த 3 உடல்களும் கர்தோய் மாவட்டத்தை சேர்ந்தவை என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாவட்ட போலீசாரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. இந்த 3 உடல்களும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய
தி.மு.க. தலைவ
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி
இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர
மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப