சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இன்று முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை ரெயில்வே கோட்டமும், மின்சார ரெயில் சேவையை அதிகரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 7-ந் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்.
அதேபோல், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரெயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் 20-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்
இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி
சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப
1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில
முஹம்மது நபியைப் ப
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெ
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண
