சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை.
வுகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கருதப்படுகிறது. அதே சமயம், கொரோனா வைரசை சீனா தனது வுகான் பரிசோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
எனவே, கொரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர். இதுதொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா தோற்றம் குறித்த கூடுதல் தரவுகளை வெளியிட சீனாவைக் கட்டாயப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் "அடுத்த நிலைக்கு" எங்கு தோன்றியது என்பதை அறிந்து கொள்ள தேவையான ஆய்வுகளை உலக சுகாதார அமைப்பு முன்மொழிகிறது என தெரிவித்தார்.
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்ட
புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
ரஷ்யா, உக்ரைனின் Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை ஏவியதாக Dnipropet
கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து
கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை
ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்
