More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - அவசரமாக தரை இறக்கப்பட்டது!
கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - அவசரமாக தரை இறக்கப்பட்டது!
Jun 07
கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - அவசரமாக தரை இறக்கப்பட்டது!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவாத் மாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.



இதற்காக நேற்று மதியம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.அவர் சென்ற விமானத்தில் திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.



இதை சரி செய்ய விமானி முயற்சி செய்தார். என்றாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே கமலா ஹாரிஸ் சென்ற விமானம் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு திரும்பியது. அங்கேயே தரை இறக்கப்பட்டது.



பின்னர் அவர் வேறு ஒரு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து வேறு விமானத்தில் தனது பயணத்தை கமலா ஹாரிஸ் தொடர்ந்தார்.



அதில் அவர், திட்டமிட்டபடி குவாத் மாலாவுக்கு சென்றடைந்தார். அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்ற பிறகு அரசு முறை பயணமாக அவர் செல்லும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு விமானம் திரும்பியபோது, கமலா ஹாரிஸ் தனது கட்டை விரலை உயர்த்தி காட்டியபடி கீழே இறங்கினார் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.



விமானத்தில் கோளாறு என்று தெரிவித்த பிறகும் கமலா ஹாரிஸ் எந்தவித பதட்டமும் அடையவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



கொரோனா தாக்குதல் ஏற்பட்ட பிறகு, குவாத்மாலா, மெக்சிகோ ஆகிய இடங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு, நம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார். இங்கு வாழ்வோர் பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்கள்.



இங்கு ஆவணம் இல்லாமல் இருப்போருக்கு குடியேறுவற்கு தேவையான மூல காரணங்களை ஆய்வு செய்வதும் இவரது பயணத்தின் மற்றொரு நோக்கமாகும். இது புதிய அமெரிக்க அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரà

Jul17

இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவà

Jul17

தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை சà

Feb23

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா à®

May01

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவரà

May29

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்டà

Jul17

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை

Apr25

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கிà

Aug27

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு à

Jan26

கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத்

Jan23

அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்à®

Oct16

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக

Feb27

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,

Oct18

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா à

Mar31

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:45 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:45 pm )
Testing centres