இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 10 வயது சிறுமி கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், “சாமான்ய மக்களின் துயரங்களை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு ஆக்சிஜன் வினியோகத்தை சீர்படுத்த உத்தரவிட்டதைத் தெரிந்து கொண்டேன். நீதிமன்ற உத்தரவால் இன்று நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. நீதிபதிக்கு எனது நன்றி” என குறிப்பிட்டு இருந்தார்.
சிறுமியின் கடிதத்திற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரமணா, “உனது கடிதத்துடன், நீதிபதியின் பணியை சித்தரிக்கும் மனதுக்கு இதமான ஓவியமும் கிடைக்கப் பெற்றேன். நீ வருங்காலத்தில் நிச்சயமாக விழிப்புடன் கூடிய பொறுப்பான குடிமகளாக வளர்வாய்” என பரிசு அனுப்பி பாராட்டியுள்ளார்.
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க
ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக
நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட
மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்க
கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்
வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட
